தாஜ்மஹாலில் தாய்ப்பால் கொடுக்க தனி இடம்!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கான தனியறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாய்ப்பால் கொடுக்கும் அறையை கொண்ட இந்தியாவின் முதல் நினைவுச் சின்னம் என்னும் பெருமையை தாஜ்மஹால் பெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்லும் முன்னணி சுற்றுலாதலம் தாஜ்மஹால். இங்கு கைக்குழந்தைக்ளுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட மிகவும் சிரமப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்ட இந்திய தொல்பொருளியல் ஆய்வு துறை உடனடியாக தாய்ப்பால் புகட்டுவதற்கான பிரத்யேக அறை ஒன்றை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்த கட்டிடம் வரும் ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply