தாஜ்மஹாலில் உபி முதல்வர் யோகி: என்ன செய்தார் தெரியுமா?

தாஜ்மஹாலில் உபி முதல்வர் யோகி: என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றும், உலக அதிசயங்களில் ஒன்றுமான தாஜ்மஹால் குறித்து சமீபத்தில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தாஜ்மஹாலை இடிக்க வேண்டும் என்று கூட ஒருசிலர் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது

மேலும் தாஜ்மஹால் இதற்கு முன்னர் சிவன் கோவிலாக இருந்தது என்றும், அதனை உபி முதல்வர் பார்வையிட வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலுக்கு சென்றார். தாஜ்மஹாலுக்கு சென்றவுடன் அவரும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தாஜ்மஹாலின் மேற்கு கதவு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத். முதல்வர் யோகி தானே துடைப்பத்தை கையில் எடுத்து தாஜ்மஹாலை தூய்மைப்படுத்தியது அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.