தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசு: கே எஸ் அழகிரி ஆவேசம்

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக அரசியல் லாபம் தேடி வருகின்றனர். தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பது எப்படி என்று அரசுடன் இணைந்து செயல்படாமல் குற்றஞ்சாட்டியே பெயர் வாங்குவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என்றும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பொய் சொல்கிறார் என்றும், பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டு வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply