தவான் அதிரடி: 3வது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் அடித்தார்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. பூரன் 53 ரன்களும், பிராவோ 43 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தவான் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 92 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை பெற்றது. தவான் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.