தவறாக கூறிவிட்டேன்: சிவகார்த்திகேயன் தந்தை குறித்து எச்.ராஜா வருத்தம்!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா அவர்கள் சிவகார்த்திகேயன் தந்தையை கொலை செய்து பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தான் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்

உண்மையில் சிவகார்த்தியின் தந்தை பெயர் தாஸ் என்பதும் அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் அனைவரும் கருத்துக் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட எச் ராஜா தான் தவறாக கூறி விட்டேன் என்றும் சிவகார்த்தியன் தந்தையும் காவல் துறையை சேர்ந்தவர் என்பதால் அந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும் சிவகார்த்திகேயனை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் வேண்டும் என்ற எண்ணம் தனக்குக் கிடையாது என்றும் தன்னுடைய தவறுக்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்