’தளபதி 65’ படத்தின் இயக்குனர் பட்டியலில் திடீரென நுழைந்த பெண் இயக்குனர்!

’தளபதி 65’ படத்தின் இயக்குனர் பட்டியலில் திடீரென நுழைந்த பெண் இயக்குனர்!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது. அவருடைய அடுத்தப் படத்தை மோகன்ராஜா, சமுத்திரகனி, பேரரசு, ’கோமாளி’ பிரதீப், வெற்றிமாறன் உள்பட பலர் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது

ஆனால் இவர்கள் அனைவரும் விஜய் கதை கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை பேரரசு அல்லது பிரதீப் இயக்குவார் என்று கூறப்பட்டது

ஆனால் தற்போது கிடைத்த புதிய தகவலின்படி இந்த படத்தை சுதா கொங்காரா இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ள சுதா கொங்காரா கூறிய கதை ஒன்று விஜய்யை மிகவும் கவர்ந்தது என்றும், இதனை அடுத்து இந்தப் படத்தை அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும். விஜய், சுதா கொங்காரா , சன் பிக்சர்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் இணைவார்கள் என்று தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published.