’தளபதி 64’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முதலாக இணைந்து நடித்து வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி, இதுகுறித்த ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த அறிவிப்பு தளபதி விஜய் ரசிகர்களுக்காக புத்தாண்டு பரிசாக கருதப்படுகிறது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

Leave a Reply