தளபதி 64: டெக்னிக்கல் டீமை அறிமுகம் செய்த இயக்குனர் லோகேஷ்

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படமான விஜய் 64′ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று மரியாதை நிமித்தமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவை தனது டெக்னிக்கல் டீமுடன் அவர் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் உடனிருந்ததால் இந்த படத்தில் இவர்கள் மூவரும் பணிபுரியவுள்ளனர் என தெரிகிறது.

இந்த நிலையில் ‘கைதி’ படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் ‘தளபதி 64’ படத்தின் பணியை லோகேஷ் தொடங்கவிருப்பதாகவும் இயக்குனர் லோகேஷ் தரப்பு தெரிவிக்கின்றது. மேலும் தளபதி 64 குறித்த அறிவிப்பு விஜய் பிறந்த நாளில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply