தளபதி 63 படத்தில் யோகிபாபு !

தளபதி 63 படத்தில் யோகிபாபு !

2009 ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் யோகிபாபு. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘தளபதி 63’ படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். வேலாயுதம் , மெர்சல் , சர்க்கார் போன்ற படங்களை தொடந்து நான்காவது முறையாக தளபதி விஜய் படத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அட்லீ இயக்கும் படங்களில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் யோகிபாபு .ஏற்கனவே ரோபோ ஷங்கரின் மகள் ‘தளபதி 63’ படத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply