‘தளபதி 63’ படத்தின் முக்கிய கேரக்டரில் ஜருகண்டி நாயகி!

‘தளபதி 63’ படத்தின் முக்கிய கேரக்டரில் ஜருகண்டி நாயகி!

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படத்தில் நாயகியாக நடித்த ரெபா மோனிகாஜான் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் கதை என்பதால் இந்த படத்தில் வரும் கால்பந்து அணியின் கேப்டன் கேரக்டரில் ரெபா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது இதற்காக அவர் கால்பந்து பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.