தளபதி விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ளது. தளபதி விஜய் எப்பொழுதுமே ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அடுத்த படத்தின் இயக்குனரை அவர் உறுதி செய்து விடுவார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தற்போது ‘தளபதி 65’ படத்தின் இயக்குனராக அவர் ஏஆர் முருகதாஸ் அவர்களை முடிவு செய்துவிட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் மீண்டும் இணையும் இந்தப் படம் ’துப்பாக்கி 2’ படம் தான் என்றும் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியை ஏஆர் முருகதாஸ் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

கடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி படம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் ஆசை தற்போது பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply