தளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் !

தளபதியின் 63 படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் !

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி , மெர்சல் ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படம் ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விருந்தினர்களாக அட்லீ , பிரியா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரோபோ ஷங்கர் பேசியபொழுது ‘என் மகள் தளபதி 63 படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார்’ என்று கூறினார்.

மேலும் இந்த விழாவை அட்லீயின் மனைவி பிரியா விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு சங்க தலைவர் கவிதா நினைவு பரிசு வழங்கினார். மேலும் சங்க செயற்குழு உறுப்பினர் சஞ்சய் விருந்தினர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

 

Leave a Reply