‘தல 60’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா?

தல அஜித் நடித்துள்ள ‘நேர் கொண்ட பார்வை’ வரும் வியாழன் அன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், ‘வரலாறு’ திரைப்படத்திற்கு பின்னர் அஜித் படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கும் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது

ஆனால் இந்த செய்தியை இயக்குனர் எச்.வினோத் மறுத்துள்ளார். ‘தல 60’ படத்திற்காக இதுவரை எந்த டெக்னீஷியன்களும் உறுதி செய்யப்படவில்லை என்றும், குறிப்பாக ரஹ்மான் அவர்களை இன்னும் தான் சந்திக்கவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply