‘தல 60’ திரைப்படம் குறித்து போனிகபூர் பேட்டி!

தல அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்த ‘நேர் கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக மாறிய நிலையில் இதே கூட்டணியில் தயாராகும் ‘தல 60’ திரைப்படம் அதிரடி ஆக்சன் படம் என்றும், இந்த படத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேசிங் காட்சிகள் அதிகம் என்றும் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை தமிழில் மட்டுமே தயாரிக்கும் ஐடியா இருப்பதாகவும் தேவைப்பட்டால் இந்தியிலும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘தல 60’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்றும், இந்த படம் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply