‘தல 59 ‘ படத்தை பற்றிய முக்கிய தகவல் !

‘தல 59 ‘ படத்தை பற்றிய முக்கிய தகவல் !

‘ விஸ்வாசம் ‘ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல அஜித் . இந்த படம் பாலிவுட் திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற படமான ‘ பிங்க் ‘ படத்தின் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

‘ தல 59 ‘ படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இருப்பதாகவும் இதில் ஒரு பாடலில் அஜித் மற்றும் வித்யாபாலன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன . மேலும் இந்த படத்தில் வித்யாபாலன் அஜித்துக்கு ஊக்கம் கொடுக்கும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது . இந்த படத்தில் வித்யாபாலன் காட்சிகள் 6 நாள்கள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதுல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார் . அதுமட்டுமல்லாமல் 5 வருடங்கள் கழித்து மீண்டும் தல அஜித் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா

Leave a Reply