shadow

தற்போதைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை கூற முடியாது: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வரும் 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருப்பதாவும், அப்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே, தனது மெஜாரிட்டியை நிரூபிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையின் நிலவரம் குறித்து பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது: தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு இலங்கை நாடாளுமன்றம் தீர்வு காணும். ஆனால் அதேவேளையில் நம்பிக்கை இழந்த சிலர் வன்முறையில் ஈடுபடக் கூடும். இதனை தவிர்ப்பதற்கு போதிய கால இடைவெளி இல்லை.

வன்முறையில் ஈடுபடக் கூடாது என எனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை கூற முடியாது. அதிபர் சிறிசேனவுடன் மோதல் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் எனது பதவி நீக்கம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்

Leave a Reply