shadow

தர்ஷனை ஷெரின் போட்டு தள்ளியது இப்படித்தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரமே ஷெரின் வெளியேறி இருக்க வேண்டிய நிலையில் நூலிழையில் அவர் தப்பித்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வாரம் ஷெரின் கண்டிப்பாக அவர் வெளியேறும் வாய்ப்பு அதிகம் என்ற நிலை இருந்தது. இதனை சரியாக புரிந்துகொண்ட ஷெரின் தனக்கு அடுத்தபடியாக உள்ள தர்ஷனை குறிவைத்து காய் நகர்த்தி உள்ளார்

தன்னிடம் நெருங்கி பழகுவது போன்று தர்ஷனுடன் காதல் போன்ற ஒரு நாடகத்தை ஏற்படுத்தி, ரொமான்ஸ் மூடுக்கு தர்ஷனை வரவழைத்த ஷெரின் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்

ஏற்கனவே ஷெரின் ஒரு கட்டத்தில் ’தன்னை காதலித்த பையன் மட்டுமே தனது பள்ளியில் தேர்ச்சி அடையவில்லை என்றும் மற்ற அனைவரும் தேர்ச்சி அடைந்து விட்டார்கள் என்றும் தன்னை காதலித்த ஒரே காரணத்தால் அந்த பையன் தோல்வியடைந்ததாகவும் கூறியிருந்தார்

இதேபோல்தான் தர்ஷனை தன்னுடைய கவனத்தில் கொண்டு வந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்பதே ஷெரினின் திட்டம் ஆக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது ஷெரின் ரொமன்ஸ் நாடகத்தில் வீழ்ந்த தர்ஷன் பரிதாபமாக இன்று வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *