தர்பார் சென்சார் சான்றிதழில் ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படம் இன்று சென்சார் பணி முடிவடைந்து சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது

தர்பார் படத்திற்கு யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது

ரஜினி படம் என்றாலே குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப் படம் சுமார் இரண்டரை மணி நேரங்களை கொண்டது என்பது ஒரு ஆச்சரியமான தகவலாக ரஜினி ரசிகர்களுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து படங்களும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரங்கள் மட்டுமே ரன்னிங் டைம் ஆக இருக்கும் நிலையில் ரஜினி படமும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply