shadow

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்: விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விஷாலுக்கு எதிராக திரண்டுள்ள தயாரிப்பாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு:-

சங்கத் தலைவர் விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது.

கடந்த நிர்வாகம் சங்கத்துக்கு வைத்து சென்ற வைப்புத்தொகையில் மோசடி நடந்துள்ளது. பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? கியூப் கட்டணத்தை குறைப்பதற்காக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டதில் எந்த பயனும் ஏற்படவில்லை. பதிலாக முன்பைவிட கட்டணம் அதிகமாகி உள்ளது.

காலியான பதவிகள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் டிசம்பர் மாதம் ஆகியும் பொதுக்குழு கூட்டப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடனடியாக பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவே இல்லை’.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *