தயாரிப்பாளர்களுக்கு கியூப் நிறுவனம் வழங்கிய சலுகைகள்: பாரதிராஜா அறிவிப்பு

தயாரிப்பாளர்களுக்கு கியூப் நிறுவனம் வழங்கிய சலுகைகள்: பாரதிராஜா அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமனம் செய்த தனி அதிகாரியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான பாரதிராஜா உள்பட ஏழு பேர்கள் இணைந்து கியூப் நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கியூப் நிறுவனம், தயாரிப்பாளர்களுக்கு ஒருசில சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம். நமது சங்கத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு கடந்த 23.06.2019 அன்று கியூப் நிறுவனத்துடன் நடத்திய பேசுவார்த்தையின் அடிப்படையில்

1. நாளை (29.06.2019) முதல் தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கியூப் கட்டணம் இல்லை. மேலும் காட்சி தேவைப்படும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கை கியூபில் கொடுத்து தங்களது திரைப்படத்தின் டிசிபிஐ காப்பி செய்து லைஃப் டைம் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

2. ஜூலை 12 முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ஒரு நிமிட டிரைலர்களுக்கு கட்டணம் இல்லை

3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களுக்கான லைஃப் டைம் கியூப்புக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் ஷிப்டிங் வசதி உண்டு என்று கியூப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.