தமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்

தமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட திமுக கூட்டணியின் எம்பிக்கள் அனைவரும் பதவிப்பிரமாணம் செய்யும் போது தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க என கோஷமிட்டு பதவியேற்றனர். ஆனால் பதவியேற்ற அனைவருமே ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போட்டுள்ளனர்.

இதை கவனித்த நெட்டிசன்கள், ‘ஏன் பதவியேற்ற எம்பிக்களுக்கு உண்மையாகவே தமிழ்ப்பற்று இருந்தால் தமிழில் கையெழுத்திட்டிருக்கலாமே என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

தமிழ் வாழ்க என கோஷமிட்டவர்கள் எல்லாம் தமிழ் பற்றாளர்கள் இல்லை என்றும், உண்மையான தமிழ் பற்றாளர்கள் அதனை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள் என்றும், தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் மட்டுமே தமிழ் வாழ்க என கோஷமிடுவார்கள் என்றும் நெட்டிசன்கள் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply