தமிழ் ராக்கர்ஸ் கதையை முடித்த விஷால்

தமிழ் ராக்கர்ஸ் கதையை முடித்த விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை கதற வைத்து கொண்டிருந்த தமிழ் ராக்கர்ஸ் கிட்டத்தட்ட மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் எடுத்த அதிரடி முடிவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ராக்கர்ஸ் புதிய திரைப்படங்களை ரிலீஸ் ஆன அன்றைய தினமே தங்களது இணையதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்து வந்த நிலையில் விஷாலின் சைபர் டீம் தமிழ் ராக்கர்ஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்தது

இதன்படி தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு வழங்கும் விளம்பரங்களை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது. தற்போது விளம்பரங்கள் மூலம் வந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் திடீரென தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு நின்றுவிட்டதால் தொடர்ந்து இணையதளத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது விஷால் மற்றும் அவரது சைபர் டீமின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.