தமிழ் நடிகையை பார்க்க 5 நாட்கள் மும்பை ரோட்டில் படுத்திருந்த ரசிகர்!

தமிழ் நடிகை ஒருவரை சந்திக்க 5 நாட்களாக மும்பை ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர் ஒருவரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரை சந்திக்க ஆந்திராவில் இருந்து மும்பை சென்ற ரசிகர் ஒருவர் ஐந்து நாட்களாக மும்பை ரோட்டில் படுத்து இருந்து அவரை சந்திக்க முயற்சித்துள்ளார்

இதன் பின்னர் தன்னை சந்திக்க ரசிகர் ஒருவர் வந்திருப்பதை அறிந்து அவரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் அளித்தார் பூஜா ஹெக்டே. இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார் இந்த சந்திப்பு குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply