தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி

சென்னையில் நடைபெற்று வரும் புரோ கபடி போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது

நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி26 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி 28 புள்ளிகளும் பெற்றன. தமிழ் தலைவாஸ் அணியின் அஜய்தாக்கூர் மற்றும் ராஹுல் செளத்ரி ஆகியோர் அபாரமாக விளையாடி ரெய்டு செய்தபோதிலும் அந்த அணி நூலிழையில் தோல்வி அடைந்தது. தலா 6 புள்ளிகளை ரெய்டில் எடுத்து கொடுத்தனர்

நேற்றைய போட்டிக்கு பின் புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்கால் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பெங்களூரு, ஹரியானா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply