தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி: அரியானாவை வீழ்த்தியது

நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் லீக் போட்டி ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் அரியானா அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி, குறைவான புள்ளிகளைப் பெற்று இருந்தாலும் இரண்டாவது பாதியில் சுதாரித்து விளையாடி மொத்தம் 35 புள்ளிகளை எடுத்தது. ஆனால் அரியானா அணி 28 புள்ளிகளை மட்டுமே எடுத்ததால் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் புனே அணி பாட்னா அணியை வீழ்த்தியது. புனே 41 புள்ளிகளும், பாட்னா அணி 20 புள்ளிகளும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply