தமிழ்ப்புத்தாண்டு தினம்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி அனைத்து தமிழர்களுக்கும் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் டுவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: தமிழக சகோதர சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்’

Leave a Reply