தமிழிசை சௌந்தரராஜனுக்கு நியமன ஆணை: ராஜ்பவன் அதிகாரி வழங்கினார்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் விரைவில் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்பார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் அவருக்கான ஆளுநர் பதவிக்கான ஆணை வழங்கப்பட்டது

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து நியமன ஆணையை, டெல்லியில் உள்ள தெலங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி வழங்கினார். இதனையடுத்து தமிழிசை இன்னும் ஒருசில நாட்களில் தெலுங்கானா ஆளுனராக பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply