தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தது நாம் தமிழர் கட்சி !

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தது நாம் தமிழர் கட்சி !

தமிழர்களின் திருநாள் என்று அழைக்கப்படக்கூடிய பொங்கல் திருநாள் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தலைவர்களும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் இனத்தை கொள்கையாக கொண்ட நாம் தமிழர் கட்சி தற்போது பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளது. ‘பொங்கல் இள மழை புடைக்கும் நாட’ என ஐங்குறுநூறும் ,
‘பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி’ என பதிற்றுப்பத்தும் , ‘போகில் பிளந்திட்ட பொங்கல் வெங் காழ்’ , ‘பெய்து புலந்து இறந்த பொங்கல் பொங்கல் வெண்மழை’ என அகநானூறும்
‘பெயல் உழந்து எழுந்த பொங்கல் பொங்கல் வெண்மழை’ என நெடுநெல்வாடையும் போன்ற சங்க இலக்கியங்கள் பொங்கலை பற்றி கூறியுள்ளன என்று நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் உலகுவால் உயிர்க்கினிய தமிழ் பேரினத்தின் உறவுகளுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply