தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம்: நீட் வழக்கில் சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு

தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம்: நீட் வழக்கில் சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு தவறுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் சிபிஎஸ்.இ இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நீட் தேர்வு, மொழிபெயர்ப்பு, தீர்ப்பு, கருணை மதிப்பெண், உச்சநீதிமன்றம்

TN Government is the reason for wrong translation: CBSE

Leave a Reply