தமிழக முதல்வர்: ஸ்டாலின் டுவிட்டரில் மாற்றம்

இந்த காலை தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் என பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் அவர் தனது டுவிட்டரில் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்றும் பதிவு செய்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலில் தோல்வி அடைந்ததும் தமிழக முதல்வர் என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டார்

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் என்று குறிப்பிடப்பட்டு திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான் என்றும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply