shadow

தமிழக முதல்வரை திடீரென சந்தித்த கருணாஸ்! அதிமுகவுக்கு ஆதரவா?

கடந்த சில மாதங்களாக அதிமுக அரசையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததுடன் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்து வந்த திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் இன்று திடீரென தமிழக முதல்வரை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தனிப்பட்ட காரணங்களுக்காக நான் முதல்வரை சந்திக்கவில்லை என்றும், திருவாடானை தொகுதியில் கன்மாயை தூர்வாருவது குறித்து முதல்வரிடம் பேசினேன் என்றும் கூறினார்.

கருணாஸ் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கும் என்பதால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *