தமிழக முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் சரத்குமார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் செல்ல உள்ள நிலையில் இன்று அவரை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சந்தித்தார்.

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு சரத்குமார் தனது வாழ்த்துக்களை இந்த சந்திப்பின்போது தெரிவித்து கொண்டார் என்று செய்தி வெளிவந்துள்ளது

சரத்குமாருடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Leave a Reply