தமிழக பேருகளில் தமிழுக்கு இடமில்லையா? கொதித்து எழுந்த கனிமொழி

தமிழக பேருகளில் தமிழுக்கு இடமில்லையா? கொதித்து எழுந்த கனிமொழி

புதியதாக வாங்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ் மொழியே இல்லை என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் மட்டும் இருப்பதாகவும் கனிமொழி தனது டுவிட்டரில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.

கனிமொழியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, ‘வெளி மாநிலத்தில் தயாரித்து கொண்டு வரப்பட்ட அரசு பேருந்தில் இந்தி ஸ்டிக்கர்கள் இருந்தன. பயணிகள் சேவைக்கு விடுவதற்கு முன்பே அரசு பேருந்துகளில் இருந்து இந்தி ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுவிட்டது என விளக்கம் அளித்துள்ளது

 

Leave a Reply