தமிழக பாஜக தலைவராக நான் நியமிக்கப்பட்டால்? பிரபல நடிகர்

தமிழக பாஜக தலைவராக நான் நியமிக்கப்பட்டால்? பிரபல நடிகர்

தமிழக பாஜக தலைவராக நான் நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன் என்று பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவருக்கான பெயர் பட்டியலில் எனது பெயரும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டு ஒருசில மாதங்கள் ஆனபின்னரும் இன்னும் தமிழக பாஜகவின் புதிய தலைவர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது

இந்த நிலையில் இந்த மாதம் தமிழக பாஜக தலைவர் பெயர் அறிவிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் புதிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன், கே டி ராகவன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், சி பி ராதாகிருஷ்ணன் உள்பட பலரது பெயர்கள் பட்டியலில் உள்ளன என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக என்னை நியமனம் செய்தால் நான் சிறப்பாக செயல்படுவேன் என்றும், தமிழக பாஜக பெயர் பட்டியலில் என்னுடைய பெயரும் இருக்கிறது என்றும் எஸ் வி சேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சந்தித்த எஸ்.வி.சேகருக்கு பாஜக தமிழக தலைவர் பதவி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.