தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் நேற்றும் இன்றும் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இந்த பணிகள் முடிவடையாததால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது

எனவே பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திங்கட்கிழமை தான் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply