தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக திடுக்கிடும் புகார் மனு

இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக திடீரென திடுக்கிடும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. அதன்படி 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply