தமிழக அரசுக்கு எதிரான வழக்கு: விஷாலுக்கு ஆதரவாக வந்த உத்தரவு

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு: விஷாலுக்கு ஆதரவாக வந்த உத்தரவு

தமிழக அரசு சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என் சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமனம் செய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தனி அதிகாரியை நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார்

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடந்தது

இன்றைய விசாரணைக்கு பின்னர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இந்த உத்தரவின் காரணமாக விரைவில் தமிழக அரசு தேர்தலை அறிவிக்குமா? அல்லது மேல்முறையீடு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply