தமிழக அரசின் அறிவிப்புக்கு கனிமொழி எம்பி வரவேற்பு

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. படிக்கும் மாணவர்கள் மத்தியில் சாதி என்னும் வேறுபாடு இருக்கக்கூடாது என்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் ‘ராட்சசி’ படத்தில் இதுபோன்ற ஒரு காட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply