shadow

தமிழகம் வரும் பிரதமருக்கு மீண்டும் கருப்புக்கொடி காட்டுமா திமுக

டெல்லியில், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஜனவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி தொடங்குகிறார்.

ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் தமிழகம் வருகிறார். மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மக்களிடம் பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் வர வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் பிரசாரத்திற்கு அவர் தமிழகம் வருவது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்தபோது கருப்புக்கொடி காட்டிய திமுக இந்த முறையும் கருப்புக்கொடி காட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *