தமிழகம் வந்தது ஆந்திரா தண்ணீர்!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஆந்திரா மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் சோமசீலா வந்தடைந்தததாகவும், ஸ்ரீசைலத்தில் 32,000கன அடிநீர் திறக்கப்படும் நிலையில் சோமசீலா அணைக்கு 4,000 கனஅடி நீர் வருகிறது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply