தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்

தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர் காலமானார். அவருக்கு வயது 57

கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் 53 ரன்கள் அதிகபட்ச ரன்களை அடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வி.பி. சந்திரசேகர் இருந்த போது தோனியை அணிக்கு எடுக்க முக்கிய பங்கு ஆற்றினார்.

தற்போது டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடி வரும் காஞ்சி அணியின் உரிமையாளரான வி.பி. சந்திரசேகரின் மறைவு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply