தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை:

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக டி.எஸ். ஜவஹரும்,

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மாவும்.

பொதுப்பணித்துறை செயலாளராக மணிவாசனும்,
கால்நடை, மீன்வளம், பால்வளம், மீனவர்நலத்துறை செயலாளராக கார்த்திக்கும்,

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்தும்,

தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக மதுமதியும்,

நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.