தமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்

தமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த முடிவு தமிழகம் எப்போதுமே பாஜகவுக்கு எதிராக குறிப்பாக மோடிக்கு எதிராகவே இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. இதனையே இன்றைய பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மோடிக்கு ஏற்பட்ட தோல்வி எதனால் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருப்பதால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய், ஆகியோர்களை அடுத்து மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி என்றும், தமிழகத்தில் மோடிக்கு எதிராக அலை இருந்ததாகவும், எதிர் அலை இருந்தாலும் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.