தமிழகத்தில் மே இறுதிக்குள் உச்சம் செல்லும் கொரோனா; மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் மே இறுதிக்குள் கொரோனா வைரஸ் பரவும் வேகம் உச்சத்திற்கு செல்லும் என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் உச்சம் செல்லும் என்றும் அதன் பிறகுதான் படிப்படியாக குறையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

எனவே மே இறுதிவரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவை காரணமாக வெளியே வந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்