தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, வேலூர் என மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில் இன்று மேலும் 2 மாநகராட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய இரண்டு நகராட்சிகள் மாநகராட்சிகளாக முதல்வர் இன்று அறிவிக்கக்கூடும் என தெரிகிறது. இவ்வாறு அறிவிப்பு வெளியானால் தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர், நாகர்கோவில் ஆகிய இரண்டும் மாநகராட்சிகளாக மாறும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்து ஓசூர், நாகர்கோவில் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே இந்த இரண்டு நகரங்களையும் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply