தமிழகத்தில் முழு ஊரடங்கு: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

ஆனால் இன்று முதல் தளர்வுகள் குறைக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது

இன்று முதல் தேநீர் கடைகள் நடைபாதை காய்கறி கடைகள் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அனுமதிக்கப்பட்ட கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்