தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்கிறதா?

தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்கிறதா?

சமீபத்தில் புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்ந்ததை அடுத்து தமிழகத்திலும் மின் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின

ஆனால் தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை என்றும், தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவலில் உண்மை இல்லை என்றும் மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், பேருந்து கட்டணம் என தொடர்ச்சியாக விலையேற்றத்தை சந்தித்த பொதுமக்கள் மின்வாரியத்தின் இந்த அறிவிப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Reply