தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படும்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடியால் பரபரப்பு

தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படும்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடியால் பரபரப்பு

8 சதவீத மாநில வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் 8 சதவீத மாநில வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் திரும்பப்பெறாவிடில் மார்ச் 1 முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திரையரங்குகள் பற்றாக்குறை காரணமாக ரிலீசாகும் படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு கோலிவுட் திரையுலகினர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது

Leave a Reply