தபால்துறை குறித்து பரவிய வதந்தி: பெரும் பரபரப்பு

தபால் துறையில் வங்கி கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வதந்தி மூணாரில் கடந்த சிலமணி நேரங்களாக பரவி வருகிறது

இந்த வதந்தி பரவிய சிறிது நேரத்தில் மூணார் அஞ்சல் அலுவலகத்தில் கூட்டம் களைகட்டியதாகவும், இதுவரை மூணார் அஞ்சல் நிலையத்தில் 1053 பேர் வங்கிக்கணக்கு துவங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளடு.

இதனையடுத்து மூணார் அஞ்சல் அலுவலகம் இது வதந்தி என அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இருப்பினும் மக்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து தபால் அலுவலகத்தில் வங்கிக்கணக்கை தொடங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply