தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர்

 வசந்தகுமார் மறைவுக்கு கமல் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், தொழிலதிபரும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சற்று முன்னர் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் தொழிலதிபர் வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.

Leave a Reply

Your email address will not be published.